பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். முன்னணி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான லேடி காஷ் திடீரென சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை காணொளி மூலமாக லேடி காஷ் வெளியிட்டுள்ளார்.
அதோடு பதிவு ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர்களுக்கு போட்டி நடக்கும் Tanzania கொரோனா பாதிப்பு இல்லாத இடம் என்ற காரணத்திற்காக முறையான பரிசோதனை செய்யப்படவில்லை. அதன்பின் கோஸ்டின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதோடு தனிமைப்படுத்தப்பட்ட நேரங்களில் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.