பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்டார். அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமரீந்தர் சிங்க் ராஜினாமா செய்தது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங்க் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத குழப்பங்கள் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் பாஜக தேர்தல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. காங்கிரசில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, குழப்பம் பாஜகவுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகாண்ட் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
எனவே இந்த தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ஆளும் கட்சிகளை விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் ஆட்சி நிலவிய குழப்பங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பேசுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சம் ரூபாய் ஊதியமாக பெறுகிறார். ஆனால் அவர் நல்ல ஆடைகளை அணிந்து கொள்வதில்லை. யாராவது 5000 ரூபாய் கொடுங்கள் அவர் சரியான உடைகளை அணியட்டும். மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கும் அவரிடம் நல்ல சூட்-பூட் இருக்கிறதா? என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டுவிட்டர் பதிவில், பஞ்சாப் முதலமைச்சர் சரண்சிங் சன்னிக்கு என்னுடைய ஆடைகள் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. மக்களுக்கு என்னுடைய ஆடைகள் பிடித்துள்ளது. என்னுடைய ஆடைகள் குறித்த விவாதத்திற்கு சொல்வதை விட்டுவிட்டு மாநிலத்தில் ஒவ்வொரு வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை தருவது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது போல . போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கொடுப்பது குறித்து சரஞ்சித் சிங்க் பேசட்டும் என்று பதிவிட்டுள்ளார்.