Categories
உலக செய்திகள்

பாடம் கற்பிக்க நாங்கள் தயாராக இல்லை..! ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

ஆசிரியர் தொழிற்சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நேற்று ஆசிரியர் தினம் இலங்கையில் கொண்டாடப்பட இருந்த நிலையில் நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதுவரையில் அரசு சில பாடசாலைகளை திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் பாடங்களை கற்பிப்பதற்கு தாங்கள் தயாராக இல்லை என்று ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

மேலும் “இலங்கை முழுவதும் இன்றைய தினம் தாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்த எதிர்பார்த்துள்ளோம்” என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அரசாங்கம் 87 நாட்களாகியும் ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காமல் உள்ளது. எனவே போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |