Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியன் ரயில்வே துறையில் பல லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் PLB எனப்படும் உற்பத்தி திறன் அடிப்படையில் போனஸ் என்பது ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை விடுமுறைக்கு முன்பாக ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கலாம் என்று மத்திய அமைச்சரவைக்கு ரயில்வே அமைச்சகம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவத தொடர்பான பரிந்துரைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு RPF/RPSF ஊழியர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |