Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதயம் கனக்கிறது…. உன் மூச்சு சத்தம் தான் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது… அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்..!!

உன் மூச்சு சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைந்து இயங்க வைத்தது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் 2 வயதான சுஜித்  கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மீட்பு பணி நடைபெற்றது. ஓட்டு மொத்த தமிழகமும் சுஜித் எப்படியாவது உயிருடன் வர வேண்டும் என ஜாதி மத பேதமின்றி அனைவரும் பிரார்த்தனை செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

இன்று அதிகாலை சுஜித் உயிரிழந்து விட்டான் என்ற சோகமான செய்தியே வந்தது. பின்னர் சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்  பாத்திமா புதூர் கல்லறைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த முதல் நாள் முதல் கடைசி வரையிலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எப்படியாவது மீட்டு விடவேண்டும் என்று மீட்பு பணிகளை மும்முரமாக கவனித்து வந்தார்.

இந்நிலையில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்

நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என் மனம் வலிக்கிறது!
எப்படியும் வந்து விடுவாய் என்று தான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை!
கருவறை இருட்டு போல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை!
மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்து கிடைக்கிறது!
85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைந்து இயங்க வைத்தது
மனதை தேற்றிக் கொள்கிறேன்…. ஏனென்றால் இனி நீ கடவுளின் குழந்தை…. சோகத்தின் நிழலில் வேதனையின் வழியில் என்று உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் விஜய பாஸ்கர் அங்கேயே இருந்து சொந்த மகன் போல எப்போது வருவான் என்று காத்திருந்ததால்  அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |