Categories
உலக செய்திகள்

பிரதி அமைச்சரிடம் இவ்ளோ பணமா..? சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொத்துக்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பன்டோரா ஆவணங்கள்” வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பினாமி சொத்துகளை கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார 35,000,000,000 ரூபாய் சொத்துக்கள் நிரூபமா ராஜபக்ஷவிடம் பண்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை நளின் பண்டார நேற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார். அப்போது இவை அனைத்தும் பொய் என்று அரசாங்கம் கூறுமா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் பண்டார ஆவணங்கள் 35,000,000,000 ரூபாய் சொத்துக்கள் நிரூபமா ராஜபக்ஷவிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம் முன்னாள் பிரதி அமைச்சரான நிரூபமாவிடம் எப்படி இவ்வளவு பணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் நிரூபமாவின் கணவருக்கு தற்போது வரையில் விஐபி சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் எந்த பின்னணியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |