Categories
அரசியல்

ஓபிஎஸ் உண்மை என்னனு தெரியாமல் பேசுறாரு…. அமைச்சர் மா.சு பதிலடி…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகளானது வெள்ளைத்தாளில் கொடுக்கப்பட்டு வருகின்றன என்றும், நிதி பற்றாக்குறையால் தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு தருவதாகும் குற்றம் சாட்டினார். மேலேயும் இப்படி தரப்படும் முடிவுகள் தெளிவாக இல்லாததால் வேறு மருத்துவமனை சென்று தங்களது நோய் குறித்து இரண்டாவது கலந்தாலோசிக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதுஎன்றும், இவ்வாறு இருக்கையில்  மருத்துவர்களுக்கு படச்சுருளின் முடிவுகளானது வாட்ஸ்அப் மூலமாக பகிரபடுவதாக  தகவல் வெளிவந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகள் டிஜிட்டல் முறையில் தான் வழங்கப்படுகிறது. ஓபிஎஸ் உண்மை தெரியாமல் பேசுகிறார் என்று பதிலளித்துள்ளார்.

Categories

Tech |