நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேன்மையான மனம் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று வீடு வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். ஆயுதங்களை கையாளும் போது கவனமாக கையாளுங்கள். உதவிகள் செய்யும் பொழுது ஆலோசித்து செய்வது நல்லது. பயணம் செல்ல நேரலாம். உங்களுடைய திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
எடுத்த காரியம் நல்லபடியாகவே நடந்து முடியும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல சிறப்பை பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அது போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே..!! இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். உங்களுடைய மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். புத்திரரின் நல்ல செயல் பெற்றோருக்கு பெருமை தேடிக் கொடுக்கும். இன்று பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு நல்லபடியாக கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கும். தூரதேச பிரயாணங்கள் செல்லவேண்டியிருக்கும். சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கிய குறைபாடு மட்டும் இருக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். முக்கியமாக வயிற்று சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும். அதை கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அது போதும் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
தூய உள்ளம் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று வியாபாரம் நல்ல லாபகரமாக இயங்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். இன்று அனுபவ பூர்வமான அறிவு உங்களுக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்க கூடும்.
தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். இன்று கூடுமானவரை அலைச்சலை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையான முயற்சி எடுத்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். பார்த்துக் -கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ இளம்பச்சை நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மற்றும் நீல நிறம்
தனது பேச்சாற்றலால் அனைவரையும் கவரக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டபணி நிறைவேறி தகுந்த நன்மையை கொடுக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இன்று வியத்தகு அளவில் இருக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும் உபரி பண வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் சலுகை விலையில் வாங்குவார்கள். இன்று உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நல்ல மதிப்பை பெறுவீர்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக முடியும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
இன்று நீங்கள் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கூடுமானவரை பாடத்தில் கவனம் செலுத்திப் படியுங்கள். அது போதும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
அதீத சிந்தனையும் செயல்திறனும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகமில்லாத எவரிடமும் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். திட்டமிட்ட பணிகளில் தகுந்த கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். காலமுறை உணவுப் பழக்கம் பின்பற்றுவதால் உடல் நலம் சீராகும். இன்று எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.
இந்த விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது கொஞ்சம் அளவாகப் பேசுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு சிறப்பை பெறமுடியும். கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். அது போலவே இன்று காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்
எதையும் தீர ஆலோசித்து ஆராய்ந்து முடிவுகளை எடுக்கக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் பிறரது செயலால் இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரி அளவில் தான் இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பார்த்து செல்லுங்கள். மிதமான வேகத்தில் செல்லுங்கள். இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். மனை தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களையும் இன்று நீங்கள் பெறுவீர்கள்.
மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ, பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
எப்பொழுதுமே உற்சாகமாக காணக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். புத்திரரின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல செயலால் கூடுதல் புகழ் கிடைக்கும்.இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகள் பலனை கொடுக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
வாகனங்கள் சேர்க்கை ஏற்படும். அதாவது வாகன யோகம் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தையும் பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
தன்னுடைய வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவரக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் சில விஷயங்கள் பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை கவனமுடன் பாதுகாக்கவும். பண பரிவர்த்தனை அளவுடன் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் குழப்பங்கள் கொஞ்சம் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை வேண்டும். அக்கம் பக்கத்தினரிடம் சில்லரை சண்டைகள் ஏற்படக்கூடும்.
எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக நீங்களே கவனிப்பது நன்மையை கொடுக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மனதை மட்டும் தயவு செய்து நிம்மதியாக வைத்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும். பாடங்களில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ காவி நிறத்தில் ஆடை அல்லது காவி நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து வித காரமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு வணங்கி இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் வெள்ளை நிறம்
மற்றவர்களின் நலனுக்காக மிகவும் கடுமையாக உழைக்கக் கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஊக்கத்தையும் கொடுப்பார்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணியை மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் குழந்தைகளின் நலன் சிறக்க கூடுதல் பாசத்துடன் தகுந்த உதவிகளைச் செய்வீர்கள். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உங்களுடைய செயல் திறமையும் நல்ல அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு எப்பொழுதுமே உங்களுக்கு உண்டு. சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக மேற்கொள்ளுங்கள். சுலபமாக முடிந்துவிடும். இன்று நினைக்கக் கூடிய காரியங்கள் சற்று தாமதத்தை கொடுக்கலாம்.
அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுடைய சிந்தனை திறனும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே என்று நீங்கள் முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான பணியை செய்யும் பொழுதோ ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் இன்று சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அனைத்து விஷயமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்
தன் குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கக் கூடிய மகரராசி அன்பர்களே.!! இன்று செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். கடின பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தொழிலில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். முக்கியமான செலவுகளுக்கு பணம் கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்கள். இன்று குடும்பத்தில் இருந்த சிக்கல் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பண வரவு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி அன்பு இருக்கும். பிள்ளைகளிடம் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.
உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுபோலவே நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்தை செய்யும் பொழுது உங்களுக்கு எப்பொழுதுமே மஞ்சள் நிறம் ஒத்துழைப்பு கொடுக்கும். நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் மனதார விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் சூரிய நமஸ்காரமும் சேர்த்துச் செய்யுங்கள். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்
மற்றவர்களுக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்ந்து கொள்ளக்கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று அனுபவ அறிவு பயனளித்து புதிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று முயற்சிகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறையும். நட்பு ஏற்படும். வீண் செலவு குறையும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு புத்தி சாதுரியம் அதிகரிக்கும் என்பதால் ஓரளவு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். மாணவர்களும் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். ஆசிரியர்கள் சொல்படி மட்டும் தயவு செய்து நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களிடம் கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள். அதுபோலவே நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையேல் சிவப்பு நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அதே போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். இன்று செய்யக்கூடிய எல்லாமே சிறப்பாகத்தான் இருக்கும். தயவு செய்து இந்த விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் சிவப்பு நிறம்
எப்பொழுதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் காணக்கூடிய மீனராசி அன்பர்களே..!! இன்று மனதில் தன்னம்பிக்கை வளரும். இடையூறுகளை சமயோசிதமாக சரிசெய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாய பண வரவில் சேமிப்பு கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு கொஞ்சம் குறையும். வெளியூர் பயணம், அதன் மூலம் அலைச்சல் இருக்கும். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக உங்களுக்கு கிடைக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டி இருக்கும். தயவுசெய்து படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அப்போதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அது போலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது, முக்கியமான காரியத்தை செய்யும் பொழுது வெள்ளை நிற ஆடை உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த நிறத்தில் கைக்குட்டை வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் வெற்றியை கொடுக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்