மேன்மையான மனம் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று வீடு வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். ஆயுதங்களை கையாளும் போது கவனமாக கையாளுங்கள். உதவிகள் செய்யும் பொழுது ஆலோசித்து செய்வது நல்லது. பயணம் செல்ல நேரலாம். உங்களுடைய திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
எடுத்த காரியம் நல்லபடியாகவே நடந்து முடியும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல சிறப்பை பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அது போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்