தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலராக வெ.இறையன்பு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே நிறைய சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதில் முதல்வரின் தனிப்பிரிவு மேம்படுத்துதல், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதை ஊக்குவித்தல் மற்றும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவுரை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றொரு சிறப்பு திட்டத்தை பற்றி வருவாய் நிர்வாக ஆணையாளர் கே.பணீந்திர ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அரசு துறைகளில் புதிதாக சேரும் ஒவ்வொரு பிரிவை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் அலுவல் கையேடு வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் 1973 ஆம் ஆண்டு கடைசியாக அலுவல் கையேடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு தற்போது வரை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் அரசு துறைகளில் புதிதாக சேர்க்கப்படும் அரசு ஊழியர்களிடம் அலுவல் கையேடு வழங்கப்படுவதால் தங்கள் பணியின் தன்மைக்கேற்ப சிறப்பாக பணியாற்றவார்கள்.மேலும் அலுவல் கையேடு புதுப்பிக்க தொடர்பாக உதவிகள் தேவைப்பட்டால் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்திடம் தெரிவிக்கலாம் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.