Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 3 மாதங்களில் சிலைகளை அகற்ற வேண்டும்… ஐகோர்ட் அதிரடி!!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கண்டிகை என்ற கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை புறம்போக்கு நிலத்தில் அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த சிலையை அகற்றுவதற்கு தாசில்தார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்..

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் அமர்வில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. அதன் அடிப்படையில்தான் சிலை அகற்றப்பட்டது என்று கூறப்பட்டது..  இதையடுத்து நீதிபதி சட்டவிதிகளை பின்பற்றி தான் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது..

இதில் எந்தவித தவறும் இல்லை. எனவே இச்சிலையை அகற்றியது சரிதான் என்று வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம் பொது இடங்கள், நெடுஞ்சாலையோரம், பொறம் போக்கு நிலத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 3 மாதத்தில் அடையாளம் கண்டு அகற்றவேண்டும் என்றும், மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகளை பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது..

மேலும் அரசியல் கட்சிகள், மதம், சாதி மற்றும் மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைக்கின்றனர்.. சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது.. சாலைகள், பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பராமரிக்க ‘தலைவர்கள் பூங்கா’ உருவாக்க வேண்டும்.

பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள், கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்   இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்..

Categories

Tech |