பாகிஸ்தானை சேர்ந்த பைஸ் ஹமீது ஐஎஸ்ஐ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பைஸ் ஹமீது பாகிஸ்தான் ராணுவத்தின் மிக முக்கிய உளவு அமைப்பான இன்டர் சர்வீஸ் இன்டலிஜென்ஸ் ( ஐஎஸ்ஐ ) அமைப்பின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து பைஸ் ஹமீது ஐஎஸ்ஐ-ன் உள்நாட்டு பாதுகாப்பு தலைவராகவும் பணிபுரிந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் பஜ்வாவுக்கு, பைஸ் ஹமீது மிகவும் நெருக்கமானவராக மாறினார்.
மேலும் பைஸ் ஹமீது தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்கும் சமயத்தில் அந்நாட்டிற்கு சென்று தலிபான் அமைச்சர்கள் நியமனத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், பெஷாவர் படைத்தளபதியாக பைஸ் ஹமீது திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நதீம் அன்ஜும் என்பவர் புதிய ஐஎஸ்ஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.