மாநாடு படத்தின் டிரைலர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநாடு பட டிரைலர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. சிம்பு நடித்த படத்தின் டிரைலர் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.