தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது, பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் தடுப்ப்பூசி செலுத்தி கொள்வதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முதன்முறையாக 1 ஆம் வகுப்பு படிக்க வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிய தெரியாது.
இதனால் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெற்றோர்கள் மட்டும் தனது குழந்தைகளுடன் வகுப்பில் இருக்கலாம். மேலும் தங்களது குழந்தைகளால் முக கவசம் அணிந்து கொண்டு இருக்க முடியவில்லை என்றால் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.