தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும். அரசானது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் கோவிலில் கூட்டமானது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில் திறந்து இருந்தால் மட்டுமே சீராக அமையும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
எனவே கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகவும், திரையரங்குகளை திறந்த நிலையில் கோயில்களை திறக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதன் மூலமாக அரசுக்கு அனைத்து கோவிலையும் திறப்பதற்கு வற்புறுத்த வேண்டும்” என்று கூறினார்.