Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “குடும்ப உறுப்பினர்களின் தேவை பூர்த்தியாகும்”… மனதில் தைரியம் உண்டாகும்..!!

எதையும் தீர ஆலோசித்து ஆராய்ந்து முடிவுகளை எடுக்கக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் பிறரது செயலால் இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரி அளவில் தான் இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பார்த்து செல்லுங்கள். மிதமான வேகத்தில் செல்லுங்கள். இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். மனை தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களையும் இன்று நீங்கள் பெறுவீர்கள்.

மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ, பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |