சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் தான் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும் ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணத்தினால் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 14 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் முதலிடத்தில் 13 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதன் முதல் கட்டமான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கும் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு பொது பிரிவினருக்கும் நடைபெற்று முடிந்தது. அதன் பிறகு மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரியின் பெயரை பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தில் பதிவு செய்து பிறகு 8-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி கல்லூரியை உறுதி செய்தால் மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான இறுதி உத்தரவு வழங்கப்படும்.
இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எம். ஐ.டி. கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டும் அக்டோபர் 25 முதல் 27 ஆம் தேதி வரை கல்லூரியில் சேரலாம். மேலும் கூடுதல் தகவல்களை பெற www.annauniv.edu இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொறியியல் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்று அறிவித்துள்ளது.