Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை ஏற்படும்”… வாகன யோகம் ஏற்படும்..!!

எப்பொழுதுமே உற்சாகமாக காணக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். புத்திரரின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல செயலால் கூடுதல் புகழ் கிடைக்கும்.இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகள் பலனை கொடுக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

வாகனங்கள் சேர்க்கை ஏற்படும். அதாவது வாகன யோகம் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தையும் பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |