துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கேரளாவில் உள்ள தனது மனைவியின் பிறந்தநாளுக்கு 3 கோடி மதிப்புள்ள ரோஸ் ராயல்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜத் சித்தாரா, என்பவர் துபாயில் மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்ஜன்னா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குத் திருமணம் முடிந்து தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்த பொழுது ஊரடங்கு என்பதால் கோலாகலமாகத் திருமணத்தை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. மேலும் அவரது மனைவி பிசிசி குழுமத்திலேயே தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தனது மனைவியின் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாட நினைத்த கணவர் அம்ஜத், தனது மனைவியின் கனவான ரோல்ஸ்ராய்ஸ் காரை புக் செய்துள்ளார்.
தனது மனைவியின் பெயரில் புக் செய்து சர்ப்ரைசாக அவருக்கு பரிசளித்துள்ளார். மனைவியின் பிறந்த தினத்தன்று அவரையும் குழந்தையும் வெளியே கூட்டி செல்வது போல் அழைத்து ரோல்ஸ் ராயல்ஸ் ஷோரூம்க்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு மனைவியின் பிறந்த நாளுக்காக அலங்காரங்கள் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. ஷோரூமுக்குள் செல்லும்பொழுது என்ன நடக்கிறது என்று வியப்பாக பார்த்த மனைவி ரோல்ஸ் ராய்ஸ் காரை கண்டதும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அந்த காரின் மதிப்பு சுமார் 3 கோடி ஆகும்.