Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “எதிர்பார்த்த உதவி கிடைக்கும்”… அடுத்தவரை நம்பி வேலையை ஒப்படைக்காதீங்க..!!

தன்னுடைய வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவரக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் சில விஷயங்கள் பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை கவனமுடன் பாதுகாக்கவும். பண பரிவர்த்தனை அளவுடன் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் குழப்பங்கள் கொஞ்சம் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை வேண்டும். அக்கம் பக்கத்தினரிடம்  சில்லரை சண்டைகள் ஏற்படக்கூடும். எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக நீங்களே கவனிப்பது நன்மையை கொடுக்கும்.

இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மனதை மட்டும் தயவு செய்து நிம்மதியாக வைத்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும். பாடங்களில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ காவி நிறத்தில் ஆடை அல்லது காவி நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து வித காரமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு வணங்கி இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |