ஆக்கஸ் ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா செயலருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உடன் ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் ஏற்கனவே பிரான்ஸிடம் பல மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்ட பின்னரே அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக ஆக்கஸ் என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரான்ஸிற்கு எந்தவொரு தகவலோ அல்லது முன்னறிவிப்போ அளிக்காமல் ஆஸ்திரேலியா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதனால் கோபமடைந்த பிரான்ஸ் அரசு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டது. இதனை அடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதற்கு பிறகே மீண்டும் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் தூதர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிரான்ஸ் எம்.பிக்கள் முன்னிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean Yves Le Drian பேசியுள்ளார். அதில் ” அமெரிக்கா செயலரான Antony Blinken பாரிஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரிடம் இந்த விவகாரம் குறித்து உறுதியான மற்றும் வெளிப்படையான ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்த விவகாரம் ஆனது இன்னும் தீவிரமாகத்தான் உள்ளது. அதற்கான தீர்வு இன்னும் எடுக்கப்படவில்லை. தற்போது தான் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாங்கள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துவதை விட அதற்கான செய்லபாடுகளை செய்ய விரும்புகிறோம். இந்தப் பிரச்சினையில் இரு தரப்பு நாடுகளும் அக்டோபர் மாத இறுதிக்குள் ஒரு தீர்வு எடுப்போம். மேலும் அக்டோபர் மாதத்தின் நடுவில் அமெரிக்கா ஜனாதிபதியும் பிரான்ஸ் அதிபரும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.