இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மத்தியிலுள்ள மோடி அரசையும், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தையும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, லக்கிம்பூர் கெர்ரி வன்முறை குறித்து பேசுகையில், “மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம். இந்த வகையான கொடூரங்கள் மற்றும் கொடுமைகள் ஆங்கிலேயர் ஆட்சியின் போது காணப்பட்டன.
மோடி அரசும், உ.பி. அரசும் அதைத்தான் செய்கிறது. இந்த சம்பவமானது ஆங்கிலேயர்கள் சாம்பாரனில் செய்த கொடுமைகளை நினைவூ படுத்துகிறது. சித்திரவதை செய்யும் பழக்கமானது இந்த மாநில அரசிற்கு உள்ளது. நாளுக்கு நாள் இந்த பழக்கம் அதிகரித்து வருகிறது என்று கூறினார்.