பீகாரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கி எடுத்து சென்ற மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கத்ரா என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவன் ஒருவன் கடந்த 5ம் தேதி துப்பாக்கியுடன் பள்ளிக்கூடத்திற்கு வந்துள்ளான். இதைப் பார்த்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே பள்ளிக்கூடத்திற்கு விரைந்த போலீசார் அந்த மாணவனிடம் துப்பாக்கியை பறிமுதல் செய்து அவனை கைது செய்தனர். பின்னர் அந்த மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். இதுகுறித்து முசாபர்பூர் கிழக்குப்பகுதி எஸ் பி கே.எம்.பாண்டே கூறுகையில் துப்பாக்கி மாணவனுக்கு எப்படி கிடைத்தது உள்ளிட்ட விசாரணைகளை அவனிடம் நடத்தி வருவதாக கூறினார்.