Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் ஊழல் நிறைந்த அரசு நடக்கிறது!”.. சீனாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு.. முன்னாள் பிரதமர் ட்ரம்ப் எச்சரிக்கை..!!

அமெரிக்காவின் முன்னாள் பிரதமரான டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் ஊழல் மிகுந்த பலவீனமான அரசு நடப்பதாக அதிபர் ஜோ பைடனை குற்றம் சாட்டியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றவுடன் முன்னாள் பிரதமர் டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இருப்பினும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோ பைடன், அதிபராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பதாவது, ஊழல் மிகுந்த, பலவீனமான அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது என்று ஜோ பைடனை குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும் சீன அரசு, அமெரிக்காவை வெகு நாட்களாகவே மதிக்காமல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, சீன நாட்டின் விமானப்படை தைவானுக்கு அருகில் அதிக அளவில் போர் பயிற்சிகளில் ஈடுபட்டது. எனவே, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பதற்ற நிலையை குறைக்க, சுவிட்சர்லாந்தில், அமெரிக்காவும், சீனாவும் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில்  ஈடுபடவுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் டிரம்ப், சீன நாட்டுடன் அமெரிக்கா, போர் தொடுக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார்.

Categories

Tech |