Categories
தேசிய செய்திகள்

எத்தனை பேரை கைது செய்தீர்கள்?… சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்வி… 2 பேரை கைது செய்து விசாரணையில் இறங்கிய போலீசார்!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் 4 பேர்  பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்… இதில் மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதால் தான் 4 விவசாயிகள் இறந்ததாக சொல்லப்படுகிறது..

இந்த நிலையில் லக்கிம்பூர் சம்பவத்தில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கைது செய்யப்பட்ட இருவரும் விவசாயிகள் மீது மோதிய வாகனங்களில் பயணம் செய்தவர்கள் என உத்திரபிரதேச காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.. இந்த 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், மேலும் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. அவர்களும் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தகவல் அளித்துள்ளனர்.. இதை தவிர மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஷ்ராவையும் போலீசார் தேடி வருகிறார்கள்.. அவரிடமும் விசாரணை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.. அவர் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்..

இவ்வளவு விரைவாக இந்த வழக்கிலே தற்போது கைதுகள் நடைபெறுவதற்கு காரணம்  உச்ச நீதிமன்றம் கொடுத்த அழுத்தம் என்று நாம் கருதலாம்.. இன்று வரை இந்த வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை.. முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர் மகன் ஆசிஷ் மிஷ்ரா பெயர் இடம் பெற்றிருந்தாலும், இதுவரை கைதுசெய்யப்படவில்லை.. யாருமே கைது செய்யாமல் இருந்தனர்..

இந்த சூழலில் தான் இன்று  காலை உச்ச நீதிமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது.. அப்போது நீதிபதிகள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்? என்று கேள்வி கேட்டது மட்டுமில்லாமல் நாளை இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்..

இந்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தான் இந்த விசாரணை வேகம் பிடித்திருக்கிறது.. அதன் அடிப்படையில் இந்த கைதுகள் நடக்கின்றன.. மேலும் விசாரணை மற்றும் கைதுகள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.. நாளை உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த தகவல்கள் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்வார்கள்..

Categories

Tech |