Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “மனதில் தன்னம்பிக்கை வளரும்”… செலவு கொஞ்சம் குறையும்..!!

எப்பொழுதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் காணக்கூடிய மீனராசி அன்பர்களே..!! இன்று மனதில் தன்னம்பிக்கை வளரும். இடையூறுகளை சமயோசிதமாக சரிசெய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாய பண வரவில் சேமிப்பு கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு கொஞ்சம் குறையும். வெளியூர் பயணம், அதன் மூலம் அலைச்சல் இருக்கும். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக உங்களுக்கு கிடைக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

அதிர்ஷ்ட வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டி இருக்கும். தயவுசெய்து படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அப்போதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அது போலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது, முக்கியமான காரியத்தை செய்யும் பொழுது வெள்ளை நிற ஆடை உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த நிறத்தில் கைக்குட்டை வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களும் வெற்றியை கொடுக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |