பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வேடசந்தூரில் அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் எச். ராஜாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்த அவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Categories