நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் விஜயலட்சுமி. இவர் தமிழில் பூந்தோட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருப்பார்.
இவர் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் பெங்களூரில் வசித்து வருவதாகவும் பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவி செய்யுங்கள் எனவும் அழுதபடி பேசியுள்ளார். அந்த வீடியோ பதிவை பார்த்த பிறகு அவரது வங்கி கணக்கில் 7 லட்சம் வரை பணம் கிடைத்தது எனவும் கூறப்பட்டது.
இதனையடுத்து , விஜயலட்சுமி கர்நாடக சினிமா வர்த்தக சபையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில்” எனது அம்மா இறந்தவுடன் என்ன செய்வது என்று தோன்றவில்லை எனவும், சில நண்பர்கள் அந்த சூழ்நிலையில் தனக்கு உதவியதாகவும் கூறியுள்ளார். மேலும், எனக்கு கதறி அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே தெரியவில்லை” என்றும் கூறினார்.
கர்நாடகாவில் நான் இன்றும் பிச்சைக்காரியாக தான் இருக்கிறேன் எனவும், எல்லாவற்றுக்கும் நான் பிச்சை தான் எடுத்து கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கென யாருமே இல்லை, எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று அழுதபடி பேசியுள்ளார்.