பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா இந்துக்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து தொடர்ந்து அவதூறு வழக்குகளில் சிக்கி வருகிறார். கடந்த 2018 ஆம் வருடம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பிலான கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு எச். ராஜாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் நேரில் ஆஜராக அவருக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.