Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு… சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி… கேரள முதல்வர் அறிவிப்பு!!

சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்..

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சபரிமலை கோயில் விழா தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

அதன்பின் கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சபரிமலையில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடுகிறது. 10 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களும் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.. பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். தரிசனத்துக்கு பின் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை.

கடந்த வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் எரிமேலி வழியாக செல்ல அனுமதி இல்லை. சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்கள் நிலக்கல் வரை செல்லவே அனுமதி வழங்கப்படும்.. பம்பா நதியில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் தடுப்புக்காக ஏற்கனவே இருந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும்..  தேவைக்கேற்ப கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்..

Categories

Tech |