இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெறும். கடைசியாக இவர் இயக்கத்தில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன்-2 திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் தேஜா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்ட படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் பூஜையில் இயக்குனர் ஷங்கரின் மனைவி, மகள்கள், மற்றும் மகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் தனது மகன் அர்ஜித் ஷங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஷங்கரின் மகள் அதிதி ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.