பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து, அந்நாட்டிற்கு பிரான்ஸிற்கும் இடையே பார்சல் சேவை விதிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பிரான்சில் மதிப்பு கூட்டு வரி மற்றும் சுங்க வரிகளினால், பார்சல்களை அனுப்ப கட்டணம் அதிகரித்திருக்கிறது. எனவே, சில பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் உறவினர்களுக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
இனிமேல் பிரான்ஸ் நாட்டிற்கு, பிரிட்டனிலிருந்து அனுப்பப்படும் பார்சலில் என்ன உள்ளது? என்பதையும், customs declaration படிவத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறையானது, வடக்கு அயர்லாந்திற்கு கிடையாது. மேலும் விலங்குகள் மூலம் கிடைக்கும் பொருட்களை, பிரிட்டனிலிருந்து எளிதாக அனுப்ப முடியாது.
இதனால், சாக்லேட்களையும் உறவினர்களுக்கு பார்சலில் அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாக்லேட் தயாரிக்கப்படும்போது பால் சேர்க்கப்படுவதால் இந்த விதிமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட உணவுகளை பார்சலில் அனுப்பினால் அவை எல்லையில் கைப்பற்றப்படும்.
ஆனால், பிரான்சை ஒப்பிடும்போது, பிரிட்டனில் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கிறது. எனவே பிரான்சிலிருந்து உணவு பொருட்களை, பிரிட்டனுக்கு சற்று எளிதில் அனுப்பிவிட முடியும். பிரிட்டன் அரசின் விதிப்படி, பால் மற்றும் இறைச்சி தொடர்பான உணவு பொருட்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. எனினும் சுங்க வரிகள் வழக்கத்தில் இருக்கிறது. இதனால் சரியாக பார்சல் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் பானங்களை பிரிட்டனுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.