Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மொபட்டில் அரிசி கடத்திய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் குலவணிகர்புரம்-மேலப்பாளையம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர் மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் வெங்கடாசலபதி என்பதும் அவர் 3 மூட்டைகளில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வெங்கடாசலபதியை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த அரிசி மூட்டைகள் மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |