மகாளய அமாவசையன்று தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அப்பகுதி மிகவும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தீர்த்தாண்டதானம் கடற்கரை ஸ்ரீ ராமபிரான் அவரது தந்தை தசரத மன்னனுக்கு தர்ப்பணம் செய்த இடமாக விளங்கி வருகிறது. இதனை பின்பற்றும் வகையில் பக்தர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்று கடலில் நீராடி பூஜை செய்வது வழக்கம். இதனையடுத்து வழக்கமாக இந்த நாளில் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தீர்த்தாண்டதானம் கடற்கரைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே பக்தர்கள் கடற்கரைக்கு செல்லும் பகுதிகளில் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சர்வ தீர்த்தேசுவரர் கோவிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்போல அமாவசை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.