கமல் ஹாசன் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் ஜிஜி சிவா தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை பற்றியும் கமல்ஹாசன் அவர்களைப் பற்றியும் ஜிஜி சிவா தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது மக்களிடையே வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர், கட்சி தொடங்கும் போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கின்ற கமல் பிக் பாஸ் போன்ற கேவலமான நிகழ்ச்சியை ஏன் தொகுத்து வழங்குகிறார் என கேட்டுள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் அவர்கள் பிக் பாஸ் சீசன் 5 தொடங்குவதற்கு முன்பு பாரம்பரிய ஆடைகள் தான் பயன்படுத்துவார்கள் என்று கூறியிருந்தார்.
ஆனால், இப்பொழுது ஏன் கேவலமான ஆடைகளை கமல்ஹாசன் உட்பட அனைவரும் அணிந்து வருவதாக ஜீஜி சிவா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் பேசி வைத்தபடி தான் நடந்து வருகின்றனர் எனவும், போட்டியாளர்கள் சிலர் காதல் என்ற பெயரில் கேவலமாக நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மட்டமான நிகழ்ச்சி எனவும், அதில் கமல்ஹாசன் புரோக்கராக நடந்துகொள்கிறார் எனவும் கூறியுள்ளார். இது மக்களிடையே மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.