Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து பெய்த கனமழை… குளம்போல் தேங்கிய மழைநீர்… வாகன ஓட்டிகள் அவதி…!!

தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, சத்திரக்குடி, பார்த்திபனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். மேலும் பொன்னையாபுரம் தியேட்டர் பகுதியில் இருந்த டிரன்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

இதனால் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று டிரன்ஸ்பார்மரை சரி செய்து மின் இணைப்பு வழங்கியுள்ளனர். இதேபோல் பரமக்குடி பகுதியில் பெய்த கனமழையால் விவசாயி ஒருவரின் வீடு இடிந்து விழுந்த நிலையில் பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு ஈழப்பீடு தொகையை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |