Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய கூடாது” போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் சங்கத்தினர்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் மாவட்டத் துணைத் தலைவர் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நிர்வாகிகள் பால்ராஜ், சேக்முகமது, இளையராஜா, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என கோஷம் எழுப்பினர்.

இதேபோல் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் அர்ச்சுணன், மாநில பொதுச்செயலாளர் யாக்கோப், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர், சங்க துணைத்தலைவர் ஜபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |