Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் சேர்க்கை… தொடரும் சர்ச்சை… உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி…!!!

திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்களின் நியமனத்தில் குற்ற பின்னணியுடன் உள்ளவர்களை நியமித்தது தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக ஓய். வி சுப்பாரெட்டி பதவி வகித்து வருகிறார். இவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஆவார். இந்நிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் கடந்த மாதம் 24ம் தேதி ஆந்திர ஆந்திர அரசால் முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இதுவரை தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவிற்கு 75 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அறங்காவலர் குழுவைக் கலைக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில் இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் குற்ற பின்னணி உடையவர்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக  ஆந்திர மாநிலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் 18 பேருக்கு குற்றப் பின்னணி உள்ளது. மேலும் நான்கு பேர் அரசியல் காரணங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என வழக்கறிஞர் வாதாடினார். இதற்கு தேவஸ்தானத்தின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.  மேலும் நீதிமன்றம் ஒருவேளை இந்த வழக்கில் தொடர்புடைய 18 பேருக்கும் எதிர்ப்பு இருந்தால், அவர்கள் நீதிமன்ற்றத்தை நடலாம் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

Categories

Tech |