தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 5 தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முன்பே அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல் கட்டுப்படுத்துதல் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கொரோனா பரவல் போன்றவற்றைக் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அதன்படி கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் மாதந்தோறும் விவசாயிகளிடம் குறை தீர்ப்பு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்பிறகு 9-12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாக கூறப்பட்ட நிலையில், நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த வெள்ளி,சனிமற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான தடை தொடர்ந்து வருகிறது. மேலும் அரசியல்,சமூக கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் மூன்றாவது அலையை தடுப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது, வெளியிடங்களில் சமூக இடைவெளி விட்டு நிற்பது, பரிசோதனை, கண்டறிதல்,சிகிச்சைமற்றும் தடுப்பு ஊசி செலுத்துவது போன்ற வழிமுறைகளில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.