பண்டிகை காலங்களில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக கொண்டாடும்படி மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் ஷாப்பிங், கொண்டாட்டம் என்று செல்ல தொடங்குவார்கள். தற்போது தான் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பண்டிகைகளை கொண்டாடினால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும் பண்டிகைகளை மக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் கூறுகையில்: பண்டிகை காலங்களில் உங்கள் அன்பிற்குரியவர்களை ஆன்லைனில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள். கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள். மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என கூறியுள்ளார். மேலும் இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில் இந்த பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது எனக் எச்சரித்துள்ளனர்.