இளைஞர் ஒருவர் மேட்ரிமோனியில் மணமகன் எனக் கூறிக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் டிபன்ஸ் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனி தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயது பிரதிக் ஸ்ரீவத்ஸவா எனும் இளைஞர் தன்னை மோசடி செய்து இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அதாவது இந்த இளைஞர் தன்னை ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் என கூறிக்கொண்டு ஆப்பிள் பொருட்கள் அனைத்தையும் 40 சதவிகிதம் தள்ளுபடி விலையில் வாங்கி தருவதாக கூறி அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார். அந்த பெண்ணும் அவரை நம்பி சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை அவருக்கு தவணை முறையில் ரூபாய் 62,800, ரூபாய் 63000 மற்றும் ரூபாய் 86000 என மூன்று முறை அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் சிறிது காலம் கழித்து தான் ஏமாந்ததை உணர்ந்த அப்பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த இளைஞரின் லோக்கேஷனை டிரேஸ் செய்து அவரை பிடித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு லேப்-டாப் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேட்ரிமோனி தளங்களின் மூலம் திருமண மோசடி அரங்கேறுவதோடு இது போன்ற பண மோசடிகளும் நிகழத்தான் செய்கிறது என்பது நிதர்சனமான உண்மை.