Categories
உலக செய்திகள்

சண்டையில் ஈடுபட்ட கும்பல்…. உயிரிழந்த வாலிபர்…. கைது செய்யப்பட்ட குற்றாவாளிகள்….!!

சுவிட்சர்லாந்தில் நடந்த சண்டையில் இருபது வயது வாலிபர் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலென் மாநிலத்தில் Bahnhofstrasse என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று சண்டையிட்டுள்ளனர். இதில் 20 வயது வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செயின்ட் காலென் மாநில போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சண்டையில் ஈடுபட்டவர்களில் 5 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதிலும்  10 தினங்களாக நடத்தப்பட்ட போலீசாரின் தீவிர நடவடிக்கையினால் 25 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் இருவர், 24 மற்றும் 29 வயதுடைய கொசோவா நாட்டைச் சேர்ந்த மூவர் என்று மொத்தம் 5 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். குறிப்பாக உயிரிழந்த வாலிபரும் தலைமறைவாக உள்ள 22 வயதான ஜெர்மனியரையும் ஏற்கனவே போலீசாருக்கு தெரியும் என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும் கைது செய்யப்பட்டவர்களில் 24 வயதான கொசோவா நாட்டு இளைஞர் மட்டுமே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மீதியுள்ளவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சண்டையில் எந்தவொரு ஆயுதமும் உபயோகப்படுத்தப்படவில்லை. குறிப்பாக சண்டைக்கான காரணம் குறித்தும் முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

Categories

Tech |