Categories
உலக செய்திகள்

சுப நிகழ்ச்சிக்காக ஒன்றிணைந்த 2 குடும்பம்… எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்… பிரபல நாட்டில் சோகம்..!!

குழந்தையின் ஞானஸ்நான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்ற இரண்டு குடும்பங்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோமேனியாவின் செல்வந்தர்களில் ஒருவரும் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரருமான Dan Petrescu (68), அவரது மகன் Dan Stefano (30), அவரது மனைவி Dorotea Petrescu Balzat (65) உள்ளிட்டோர், இத்தாலியை சேர்ந்தவரும் Petrescu-வின் நண்பருமான Filippo Nascimbene (32)-ன் மகனான Rafael-ன் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு வருகை தந்துள்ளனர். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Filippo-வின் மனைவி Claire Stephanie Caroline, Caroline-ன் தாய், Dan Petrescu, அவரது மனைவி Dorotea Petrescu Balzat, அவரது மகன் Dan Stefano ஆகியோர் விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த விமானம் மிலன் நகரில் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் வேகமாக விழுந்ததால் தீப்பற்றி எரிந்த அந்த விமானம் ஒரு கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி கார் ஒன்றில் உள்ள டேஷ் கேம் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கோர சம்பவத்தில் Rafael உட்பட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே விமானம் விழுந்ததால் அங்குள்ள கட்டிடம் ஒன்றில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர். அதேபோல் அந்த கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த கார்கள் பல தீயில் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |