அணைக்கட்டில் ஏற்பட்ட சூழலில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அள்ளிக்குளம் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலாறு அணைக்கட்டில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழம் குறைவாக இருக்கும் பகுதியில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அதன்பின் கரையோரத்தில் கிடந்த அவரின் ஆடைகள் மற்றும் செல்போனை அங்கே வந்த வாலிபர் ஒருவர் எடுத்து அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் ஹரிஹரன் தந்தை சேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அணைக்கட்டு பகுதிக்கு வந்து ஹரிஹரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.