Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. செம ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 28%அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவை அமலுக்கு வந்தால் 31% உயரும்.

இதற்கு முன்பு 2020 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 2020 ஜூன் மாதம் 3% உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படியை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து 2021 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு ஒட்டுமொத்தமாக தற்போது அகவிலைப்படி 28% ஆக உள்ளது.

மேலும் கடந்த ஜூன் மாதத்திற்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தினால் 31% ஆக உயரும். மேலும் மத்திய அரசு ஊழியர்களும், பென்சன் வாங்குவோரும், அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |