தேர்தல் தில்லுமுல்லு என திமுக அரசின் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையம் ஒரு சார்புத் தன்மை எடுக்கின்ற நிலையில் இருக்கும் போது உயர் நீதிமன்றத்தை அணுகி, ஒரு தெளிவான உத்தரவை பெற்றோம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவை முழுமையான அந்த கேமராவில் பதிவு செய்ய வேண்டும்.
அது மட்டுமல்லாமல் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை, அதேபோன்று பூத் சிலிப் கொடுப்பது இதுபோன்ற ஒரு செயல்களெல்லாம் செய்வதன் மூலம் திமுக அரசனுடைய அராஜகங்களில் இருந்து முழுமையாக நாம் ஜனநாயக ரீதியிலே தேர்தலை நடத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கும் என்று சொல்லி, அதன் அடிப்படையில் தெளிவாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் நடக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற காலத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில்… அதுவும் கிட்டத்தட்ட 12000 பதவிகளுக்கு முதல் கட்ட தேர்தல். அதிலும் வாக்குச்சாவடிகள் மிகவும் குறைவாக இருக்கின்ற நிலையில் கேமரா பொருத்துவதில் என்ன இருக்கு, அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.
இன்று தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கும் நிலையில் கேமராக்கள் நிறைய இருக்கிறது. ஆனால் கேமராக்களை அவர்கள் பல இடங்களில் பொருத்தி பதிவு செய்வதை விட்டுவிட்டு, அதை எங்களுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிநாம். வாக்குசாவடியில் கேமரா பொருத்தவேண்டும் என ஒரு சுற்றறிக்கை எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது.
அதிலும் கூட வெப் கேமரா கிடையாது, பதிவு பண்றதுக்கு மனுவல் கேமரா. நீங்க ரெகார்ட் பண்றீங்க… ரெகார்ட் பண்ணிட்டு அந்த ரெக்காடிங்கை வந்து என்ன பண்ணலாம் ஒரு தேர்தல் தில்லுமுல்லு திமுக பண்ணும் போது முறையாக அதுகுறித்து நீதிமன்றத்திற்கு போனால்… கலவரம் வந்தது, பிரச்சனை வந்தது, கேமரா மேன் ஓடிட்டாரு அதை சொல்றதுக்கு ஒரு வசதி வாய்ப்பா… அந்த கேமராவை மேனுவலாக சில இடங்களில் ஆட்களை நியமித்து எடுக்கின்றார்கள் என தெரிவித்தார்.