மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குரும்பப்பட்டி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஸ்வரி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி தினமும் வேலைக்கு சென்று வந்த நிலையில் லட்சுமணன் அவரை பேருந்தில் ஏற்றி விட்டு திரும்பவும் அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பின்னர் ராஜேஸ்வரியின் நடத்தையில் லட்சுமணன் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இரவு நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு வந்த ராஜேஸ்வரியை அழைத்து வந்த லட்சுமணன் வரும் வழியில் வைத்து குத்தூசியால் மார்பு மற்றும் தலை உள்பட பல இடங்களில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமணனை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நீதிபதி அசின்பானு வழக்கை விசாரித்த லட்சுமணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.