விவசாய சட்டத்தில் பாதிப்பு என ஒரு பாயிண்ட் கூட சொல்லல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, விவசாய சட்டத்தில் சரியான காரணத்தை சொல்லி இதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்று சொன்னால் அதை மாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. இத்தனை கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த பின்பும் கூட யாரும் கூட குறிப்பாக ஒரு பாயிண்ட் கூட சொல்லவில்லை. அரசை விட்டுறலாம்… சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்… சொல்லியிருக்கிறார்கள்.
விவசாய சட்டங்கள் இப்போது நடைமுறைப்படுத்தாமல் ஸ்டே பண்ணிருக்கோம். அப்படி இருக்கும்போது எதற்காக போராட்டம் செய்து மக்களுடைய அன்றாட பிரச்சினைகளில் நீங்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதனால் உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவம் வேறு, விவசாய சட்டப் போராட்டம் வேறு.
உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தை பொறுத்தவரை தப்பு யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கு முதலமைச்சர் கூறியுள்ளார். விவசாய சட்டத்தைப் பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொல்லியிருக்கிறார்கள்… சட்டங்களைப் பொறுத்தவரை எங்கேயும் கூட சாதாரண ஒரு விவசாய பெருமக்கள் போராட்டம் பண்ண வில்லை, இது பண்ணியிருப்பது அரசியல் கட்சி. பஞ்சாப், ஹரியானாவில் ஆர்கனைஸ் செய்யப்பட்ட ஒரு விவசாய சங்கம் போராட்டம் செய்யுது என அண்ணாமலை கூறினார்.