செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்வி கேட்கப்பட்ட போது,
பெட்ரோல் விலை கட்டுக்குள் கண்டிப்பாக கொண்டுவரப்படும். கொண்டுவர வேண்டும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதை ஜிஎஸ்டி கொண்டு வரவேண்டும் என்பது நம்முடைய நிலைப்பாடு. நான் இன்றைக்கு அதை சொல்லவில்லை, நிறைய பேர் சொல்லுறாங்க அரசியல் அண்ணாமலை பண்ணுறாரு என்று…
2016 இல் இருந்து நம்முடைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டு வருகிறார். ஆனால் 2017 ஜிஎஸ்டி சட்டம் வந்த பொழுது அதை சட்டத்தில் பார்த்தீர்களென்றால்…. விதிவிலக்கு பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுத்திருந்தோம். எப்ப கொடுத்திருந்தோம் என்றால் 5 வருடகாலம் 2017 இருந்து 2022 வரைக்கும். அந்த ஐந்து வருட காலம் மாநிலத்துக்கு இழப்பீடு கொடுப்பதற்காக வைத்திருந்தோம்.
இப்போது அந்த காலம் முடிவுக்கு வர இருக்கிறது, அதனால் அடுத்த கட்டமாக பெட்ரோலியம் பொருட்களை உள்ளே கொண்டு வருவதற்கான யோசனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்கு மாநில அரசு நாம ஏற்கனவே பேசி உள்ளோம். நான் எதையுமே வந்து பொத்தாம் பொதுவாக பேசவில்லை, நான் பேசுவது எல்லாமே உண்மை தன்மையை வைத்து பேசுகிறேன் என தெரிவித்தார்.