Categories
அரசியல்

பிஜேபி கூட 4 இடத்தில் வந்துருச்சு…. நாங்க ஒண்ணுமே வரல…. சீமான் வேதனை

பாஜக கூட 4இடங்களில் வெற்றிபெற்று விட்டது, நாங்கள் ஒன்றிலும் கூட ஜெயிக்கவில்லை என சீமான் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான், இவ்வளவு வலிமையான படையை உருவாக்கியது ஒற்றை மனிதனின் உழைப்பு. பிரபாகரன் என்கின்ற ஒரு பெரும் தலைவருடைய பிள்ளை  சீமான் என்கின்ற ஒருதன்னுடைய உழைப்பு. 10 ஆண்டுகளாக வீதிவீதியாக கத்தி, கதறி ஒரு பெரிய படையை திரட்டி வைத்திருக்கிறேன். அதிகபட்சமாக இந்த ஐந்தாண்டு தான், இல்லன்னா தப்பி தப்பி போனாலும் பத்து ஆண்டுகள்தான், அதுக்கப்புறம் எங்களை வெல்வதற்கு இந்த நிலத்தில் எவனும் இருக்கப்போவதில்லை.

தனித்துவத்தை விட்டுவிட்டு, தன்மானத்தை அடமானம் வைத்து விட்டு இருக்கிற பிள்ளைகள் இல்லை. சுதந்திரமாக முடிவெடுப்போம். நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதை செய்வோம், என்ன நினைக்கிறோமோ செய்வோம். அவருடன் கூட்டணி வைத்திருக்கிறோமே, அவர் கோவப்படுவார் அவரு வருத்தப்படுவார் அதெல்லாம் எனக்கு கிடையாது. நினைக்கிறதை பேசுவேன்,நீங்க வேணும்னா பாருங்க, என்னை சுத்தி சுத்தி தான் எல்லாரும் பேசிக் கொண்டிருப்பார்கள். தொலைக்காட்சிகள் பார்த்தால் என்னை தான் திட்டுவார்கள். நாம் தமிழர் கட்சி, சீமான் இரண்டு தான் திட்டு வாங்குறது.

அவனுக்கு சும்மா பேச்சு… பிஜேபி, பிஜேபி பி டீம் என சொல்லுவான், பிஜேபியை எதிர்ப்பது கிடையாது. சீமானையும், அவரின் தம்பிகளை, பிள்ளைகளை எதிர்கணும் அவ்வளவு தான். நாம் தமிழர் கட்சியை எதிர்க்கும். அதனால் தான் காடு, மலை, அருவி, ஆறு, ஏரி, குளம், பூச்சி, வண்டு, மண்புழு இதெல்லாம் பேசிட்டு இருந்தால் உண்மையாகவே என் மக்களை நேசிப்பதால் தான் இதெல்லாம் பேசுகிறோம் என கூறினார். இங்க சாமி காப்பாற்றுவதற்கு, சாமியை பற்றி பேசுவதற்கு கட்சிகள் இருக்கிறது. வாழுகின்ற பூமிக்கு அரசியல் பேசுவதற்கு பூமியை காப்பாற்றுவதற்கு கட்சி இல்லை, இந்தியாவிலே ஒரே கட்சிதான் இருக்கு, அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.

மோடி பூச்சாண்டி இல்லன்னா இதுவும் நடந்திருக்காது. மோடி வந்துருவாரு, மோடி வந்துருவாரு, சீமானுக்கு ஓட்டு போடதே நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதே மோடி வந்துடுவார் என சொன்னாங்க. பிஜேபி கூட 4 இடத்தில் வந்துருச்சு, நாங்கள் ஒரு இடத்தில் கூட வரவில்லை. அதை பற்றி யாரும் பேசவில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |